×
 

போர் நிறுத்தம், பதற்றம் தணிப்பு.. இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

 போர் நிறுத்தம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி இந்திய ராணுவம் அழித்தது. இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஆனால், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதற்கு பதிலடி என்கிற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.  ஆனால், இந்தத் தாக்குதல் அனைத்தையும் இந்திய விமானப்படை நடு வானிலேயே தடுத்து நிறுத்தி வெற்றிகரமாக அழித்தது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்தது. பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நிதானத்தை கடைபிடிக்குமாறும் பதற்றத்தை குறைக்குமாறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வேண்டுகோள் விடுத்தன.



இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடத்திய நீண்ட பேச்சு வார்த்தையின் பயனாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனை இரு நாடுகளும் உறுதி செய்தன. இதன் தொடர்ச்சியாக தாக்குதல் நிறுத்தப்பட்டு தற்போது எல்லையில் இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், இன்று நண்பகலில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் இருநாட்டு ராணுவ தலைமை இயக்குநர்களும் பங்கேற்கின்றனர். இதில் அமைதியை தொடர்வது குறித்து இரு தரப்பும் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: போர் நிறுத்த அறிவிப்பை ட்ரம்ப் ஏன் வெளியிடணும்.? புரியாத புதிரா இருக்கே.. கேள்வி எழுப்பும் திருமாவளவன்!

இதையும் படிங்க: அப்பன்கள் தீவிரவாதிகள்.. மகன்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் பொறுப்புகளில்.. வெளங்குமா இது.?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share