மேற்காசிய போர் தொடர்ந்தால்!! மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! புடின் எச்சரிக்கை!!
போர் தொடர்ந்தால், அது மேற்காசியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடர்ந்தால், அது மேற்காசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஐந்தாவது ஆண்டாக நீடித்து வரும் நிலையில், ஈரான் மீதான போர் பிப்ரவரி 28 முதல் தீவிரமடைந்துள்ளது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யா சென்ற சந்திப்புக்குப் பிறகு, புடின் மற்றும் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. ரஷ்ய அரச செய்தித் தொடர்பாளர் யூரி உஷாகோவ் இதுகுறித்து கூறுகையில், “இரு தலைவர்களிடையேயான உரையாடல் மிகவும் வெளிப்படையாக இருந்தது. ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் டிரம்பின் முடிவை புடின் வரவேற்றார். இது அமைதிப் பேச்சுக்கு வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார்” என்றார்.
இதையும் படிங்க: ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!
புடின் மேலும் வலியுறுத்தியதாவது: “இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், அது ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் தவிர்க்க முடியாத மற்றும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேற்காசிய அமைதிக்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு ரஷ்யா தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது” என்று டிரம்பிடம் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி நெருக்கடி தொடர்பாக புடின் ஒரு யோசனையை முன்வைத்தார். ஈரானிடம் உள்ள 11 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவுக்கு மாற்றினால், ஈரான் மீதான தடைகளை தளர்த்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார். ஆனால் டிரம்ப் இந்த யோசனையை நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், ரஷ்ய அதிபர் புடினின் எச்சரிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உக்ரைன் போர் இன்னும் முடிவடையாத நிலையில், ஈரான் விவகாரம் உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா இல்லாத பாரசீக வளைகுடா தான் எங்கள் எதிர்காலம்! ஈரான் உச்ச தலைவர்மொஜ்தபா சூளுரை!