×
 

“இது சரியான நேரம் ”... பாஜக தலையில் இறங்கியது அடுத்த இடி... சோனம் வாங்கிக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய பிரபலம்...!

இது சரியான நேரம் இளைஞர்கள் முன் வரவேண்டும்  என இரோம் ஷர்மிளா அழைப்பு.

ஜனநாயகத்தை பாஜகவினர் மதிக்க வேண்டும் சர்வதிகாரப் போக்கை கையாளக்கூடாது எனவும் டெல்லி போராட்டத்தில் தன்னுடைய ஆதரவை சோனம் வாங் கிக்கு தெரிவித்துள்ளார். 16 ஆண்டுகள் நானும் உண்ணாவிரத போராட்டம் இருந்தேன் ஆனால் பல்வேறு பழிகளை போட்டு என்னுடைய போராட்டத்தை தீர்க்க செய்தது பாஜக . இது சரியான நேரம் இளைஞர்கள் முன் வரவேண்டும்  என இரோம் ஷர்மிளா அழைப்பு.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் இளைஞர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அந்த பகுதியில் இணையதள சேவையை நீக்கியதற்கு மணிப்பூரின் இரும்பு பெண்மணி எனக் கூறக்கூடிய இரோம் ஷர்மிலா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், ஜனநாயகத்தை பாஜகவினர் மதிக்க வேண்டும். சர்வதிகாரப் போக்கை கையாளக் கூடாது. பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலானோர் குற்றவாளி பதிவேடுகளில் உள்ளவர்கள். நானும் 16 ஆண்டுகள் சிறப்பு அணு ஆயுத சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டேன்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

தற்போது உள்ள மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்கள் தங்களுடைய போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுத்தால் மட்டுமே இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் வெற்றி பெறும். மகாத்மா காந்தி எப்படி உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மக்களுடைய ஆதரவுடன் சுதந்திரம் பெற்றுக் கொண்டாரோ?. அது போன்று மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இது போன்ற போராட்டங்கள் வெற்றி அடைய முடியும்.

16 ஆண்டுகள் நானும் கடும் உண்ணாவிரத போராட்டம் இருந்தேன். பல்வேறு பணிகள் என் மீது சுமத்தப்பட்டு நானும் அதிலிருந்து விலகிக் கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டது.மேலும் சோணம் வாங் உள்ளிட்ட டெல்லியில் நடைபெறக்கூடிய போராட்டங்களுக்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவிப்பதாகவும், இளைஞர்கள் இதுபோன்ற நேரத்தில் முன்வர வேண்டும் என சர்மிளா தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் போராடுவதற்கு மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இதனை யாரும் தடுக்கக்கூடாது அல்லது பணம் கொடுத்து போராட்டக்காரர்களை விலைக்கு வாங்கவும் கூடாது. மத்திய அமைச்சர் பதவி விலகுவது அவர்கள் விருப்பம் ஆனால் போராட்டக்காரர்களுக்கு  கோரிக்கைகளை கண்டிப்பாக கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: EX. MLA- வுக்கே இந்த நிலைமையா..? 5 நாளாக POWER CUT..! நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share