×
 

ஸ்டாலினுக்கு ஒத்து ஊதி மடிப்பிச்சை எடுங்க… இந்த வேலையெல்லாம் எங்க கிட்ட வேணாம் - ஜெயக்குமார்

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து யார் பேசினாலும் சும்மா விடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

திராவிட இயக்கத்தில் பார்ப்பானியத்தை ஊடுருவச் செய்தவர் எம்ஜிஆர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். ஒரு பார்ப்பானிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தார் எம்ஜிஆர் என்றும் திருமா பேசினார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அரசியலில் திருமாவளவன் அடையாளம் தெரியாமல் போய்விடுவார் என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடினார்.

தனக்கு எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருந்த போதிலும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்தது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ஒரே ஜெ. தான்! தம்பி போட்ட பதிவுக்கு பிரேமலதா விளக்கம்!

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளதால் இந்த விஷயத்தை, தான் பெரிதாக விரும்பவில்லை என கூறினார்.

ஆனால், திருமாவளவனுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்., எம்ஜிஆர் பற்றியோ அல்லது ஜெயலலிதா பற்றியோ பேசினால் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்தார். 

தானும் விடமாட்டேன்., எந்த ஒரு அதிமுக தொண்டரும் விடமாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறினார். திமுகவின் தலைவர் கருணாநிதி., தற்போது திருமாவளவனுக்கும் தலைவர் கருணாநிதி ஆகிவிட்டார்., எனவே, கருணாநிதியைப் பற்றி பேசுங்கள்., அவரைப் புகழ்ந்து துதி பாடுங்கள் என்று கூறினார். ஸ்டாலினுக்கு ஒத்து ஊதுங்கள் அதில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என தெரிவித்தார். 

ஐந்து சீட்டுக்காக நீங்கள் எதிர்பார்த்து இருக்கலாம்., அதற்காக மடிப் பிச்சை ஏந்துங்கள்., ஆனால் அதற்காக கருணாநிதி தூக்கி வைத்து பேசி விட்டு எம்ஜிஆர் பற்றி அவதூறாக பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என தெரிவித்தார். 

இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்! கடம்பூர் ராஜு பகிரங்கம் மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share