×
 

கேவலம் ரூ.20,000-க்காக சிசுவுடன் துடிதுடித்து பலியான கர்ப்பிணி... மரக்கடை கொடூரன் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

பொன்னேரி காவல் நிலையத்தில் ஆனந்தன் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட் பகுதியில் விறகு கடை நடத்தி வரும் ஆறுமுகம் என்பவர், செங்கரிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்-தேன்மொழி தம்பதிக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் வழங்கி, ஆறு மாதங்களுக்கு முன்பு தனது மரக்கடைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருந்து விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கூடாரத்திலேயே அவருக்கு பிரசவம் ஏற்பட்ட நிலையில், தாயும் பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தனர்.

மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், முறையான கூலி வழங்காமல் தங்களை கொத்தடிமைகளைப் போல நடத்தியதாகவும் மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம் மீது தேன்மொழியின் கணவர் ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து பறந்த சஸ்பெண்ட் ஆர்டர்... டாஸ்மாக் ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய தவெக அரசு...!

மேலும், சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி ரூ.2 ஆயிரம் பணம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பொன்னேரி காவல் நிலையத்தில் ஆனந்தன் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கொத்தடிமை முறையில் தொழிலாளர்களை நடத்தி வந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் தற்போது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் ஏடிஎம் கொள்ளையில் அதிரடி திருப்பம்... ராஜஸ்தான் வரை சென்று வடமாநில இளைஞரை தூக்கிய தமிழக போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share