×
 

விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

விடிந்ததுமே கொலை செய்தியா என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, மாநகராட்சி வாகனக் காப்பகப் பகுதியில் 17 வயது சிறுவன் குபேந்திரன் என்பவர் அதிகாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சித்திரைத் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதல் முன்விரோதமாக மாறி, முத்துமணி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் தாக்கி, உடலை முதல் தளத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் கோயில் அருகே நடந்திருப்பது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வேதனையை வெளிப்படுத்தினார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க: கந்து வட்டிக்கு கடன் வாங்கியவர் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து... திமுக முக்கிய பிரமுகர் கைது, மகன் தலைமறைவு...!

”கனிமொழியின் இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலைகள் ஆகியவற்றின் பிரச்சனைகள், புதிய அரசின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு திறனை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. அவர் முன்பும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சிறுமி மற்றும் சிறுவர் கொலை சம்பவங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: என்னது.. முதுகில் குத்தினோமா..!! தொடர்ந்து விமர்சித்தால் இதுதான் நடக்கும்..!! திமுகவை எச்சரித்த அமைச்சர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share