மு.க.ஸ்டாலின் தலையிட்டும் தீராத பிரச்னை! கருணாஸ் கண்ணீர்! கழட்டிவிட்ட திமுக நிர்வாகிகள்!
கருணாஸ் வெளியூர் நபர் என்பதாலும், திருவாடானையில் வென்றபோது தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் அவர் மீது அதிருப்தி நிலவுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளது. அக்கட்சியின் தலைவரான கருணாஸ் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆனால், உள்ளூர் தி.மு.க. பிரமுகரை ஒதுக்கிவிட்டு வெளியூர்க்காரரான கருணாஸுக்கு சீட் கொடுத்ததால், சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். கருணாஸ் திருவாடானையில் வென்றபோது தொகுதி மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக உள்ளது. இதனால், அவருக்காக தேர்தல் பணியாற்ற மறுக்கும் நிலை உள்ளூர் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த அதிருப்தி தி.மு.க. தலைமைக்கு புகாராக சென்றது. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் நிர்வாகிகளிடம் பேசியும் பிரச்சினை தீரவில்லை. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கினார். திருப்பத்தூர் செல்லும் வழியில் சிவகங்கையில் ரோடு ஷோ நடத்தி கருணாஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இதையும் படிங்க: 5 வருஷத்துல திமுக சம்பாதிச்சது ரூ.1.50 லட்சம் கோடி?!!! என்கிட்டயே ரூ.500 கோடி வாங்கிருக்காங்க! பகீர் குற்றச்சாட்டு!
ஆனாலும், தி.மு.க. கூட்டணி நிர்வாகிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க. தலைமை, “ஒன்றிய செயலர்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. ஒழுங்காக வேலை செய்யாதவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகள் “கட்சிப் பதவி போனாலும் பரவாயில்லை. கருணாஸுக்கு கருணை காட்ட மாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், சிவகங்கை தொகுதியில் கருணாஸின் வெற்றி ஊசலாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக் கட்சியினருக்கு சீட் கொடுப்பதில் ஏற்பட்ட உள்ளூர் அதிருப்தி, தி.மு.க. தலைமைக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், சிவகங்கை தொகுதியில் என்ன நடக்கும் என்பதை மக்கள் ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வலிச்சாலும் பொறுத்துக்கோங்க!! வீண் வம்புக்கு போகாதீங்க!! கடுப்பேற்றும் கூட்டணி கட்சிகள்! திருமா கறார் கட்டளை!