கரூர் பெருந்துயரம்... தவெக மாநில நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..! சிபிஐ அதிரடி...!
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்ற வருகிறது.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தினார்.
விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 உயிர்கள் அனாமத்தாக பறிபோனது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டை உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு உடனடியாக அறிவித்தது. இந்த சம்பவம் தொடர்பான வடக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்று நினைத்த தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகமும் கரூர் சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சியில் மக்கள் சந்திப்பு… முன்னெச்சரிக்கை… முன்கூட்டியே வந்த விஜய்..!
தற்போது கரூர் பெருந்துயரம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளான மாநில நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைச் செயலாளர் நிர்மல் குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக மூவரும் நேரில் ஆஜராகி உள்ளனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர்.
இதையும் படிங்க: மீண்டு வந்த தவெக... மீண்டும் மக்கள் சந்திப்பு... சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க விஜய் திட்டம்..!