×
 

திருமாவை திருத்தப் போகிறேன்..! அந்தக் கூட்டணி சரியில்ல.. கே.பி ராமலிங்கம் பரபரப்பு பேட்டி..!

தன்னை பின்பற்றுகிற இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழி நடத்துவதாக கே பி ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மற்றும் பாமக ஆகியவை இருக்கும் எந்தவொரு கூட்டணியிலும் விசிக இணையாது என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார், ஆனால் பாஜக அதிமுகவுடன் இருப்பதால் அது சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும் திருமாவளவன் பாஜக கூட்டணியில் இணை இருப்பதாக அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனாலும், பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று திருமாவளவன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில், திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து தங்கள் கூட்டணிக்கு இழுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறினார். நாமக்கல் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தங்கமணியை பாஜக சேலம் மண்டல பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான கே.பி. ராமலிங்கம் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேர்ந்திருக்கும் கூட்டணி காரணமாக தலித் இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழி நடத்தக் கூடாது என்று தெரிவித்தார்.

திமுகவினர் ஏதோ எம்பி, எம் எல் ஏ சீட் கொடுத்தார்கள் என்பதற்காக தவறாக வழிநடத்தக் கூடாது என்றும் கூறினார். திமுக செலவுக்கு பணம் கொடுத்ததற்காக திருமாவளவன் தலித் இளைஞர்களை இப்படி தவறாக வழிநடத்தக் கூடாது என்றும் கே. பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். திருமாவளவனை நேரில் சந்தித்து திருத்தப் போவதாக அவர் கூறினார்.

திமுக கூட்டணியில் திருமாவளவன் இருந்தால் தலித் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் திமுக உடன் சேர்ந்து தலித் மக்களுக்கு துரோகம் செய்கிறார் எனவும் கூறினார். எனவே, அந்த அணியில் இருந்து எங்கள் அணியில் இழுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.

இதையும் படிங்க: தொகுதி பேரத்தை தொடங்கிய திருமா? முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே காய் நகர்த்திய சம்பவம்..!

இதையும் படிங்க: தமிழ்நாடு ஓரணியில் இருந்தா எந்த டெல்லி அணி கனவும் பலிக்காது..! CM ஸ்டாலின் ஃபயர் ஸ்பீச்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share