பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!
மாநிலத்தின் 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று முழு விடுமுறையாகும்.
கேரளாவில் கனமழை இன்றும் தொடரும் பத்தினம்திட்டா முதல் காசர்கோடு வரை 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதற்கு இடையே திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது
கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழை காரணமாக பத்தனம்திட்டா கோட்டயம் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது மலைப்பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது பம்பை ஆறு , மணி மலையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் தேங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
ஆறுகளில் மழை வெள்ளம் நிறைந்து வெளியேறி வருவதால் தாழ்வான பகுதிகளில் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மழை காரணமாக பாதிக்கப்பட்ட பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரான்ணி திருவல்லா ஆரன்முள பகுதிகளில் கேரள முதலமைச்சர் சதீஷன் பார்வையிடுகிறார் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் கனமழை... 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலத்தின் 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று முழு விடுமுறையாகும். திருச்சூர், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்லூரிகள், மதரஸாக்கள், பயிற்சி மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதேபோல், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள 3 தாலுக்காக்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பையனூர், தளிப்பரம்பா மற்றும் இருட்டி தாலுக்காக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொழிற்கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும், முன்னரே திட்டமிடப்பட்ட பல்கலைக்கழக/பொதுத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிவாரண முகாம்களை நடத்தும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் 2 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!