×
 

தேர்தல் வந்தாச்சு... ஓட்டு போடுங்க மக்களே..!! திருச்சியில் கே. என். நேரு பரப்புரை..!!

திருச்சி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என். நேரு பரப்புரை மேற்கொண்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பல்வேறு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கள் தேர்தல் பரப்புரையையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தனது தேர்தல் பரப்புரையை உற்சாகமாகத் தொடங்கியுள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு, தனது தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியாகும்.

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், இம்முறையும் அதே தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கியுள்ளார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்யும் முதல் நாளே கே.என்.நேரு தனது வேட்புமனுவை திருச்சி வருவாய் கோட்டாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் திமுகவின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பலர் உடன் இருந்தனர். 

இதையும் படிங்க: அமைச்சர் நேரு மீதான முறைகேடு விவகாரம்... அரசு அனுமதிக்கு வெயிட் பண்ணனுமா? லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்..!!

இந்த நிலையில், இன்று திருச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கே. என். நேரு பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பரப்புரையில் ஈடுபட்டார். 

இதையும் படிங்க: மக்களே ரெடியா?... திமுக மாநாட்டில் காத்திருக்கும் சப்ரைஸ்... அமைச்சர் கே.என்.நேரு சொன்ன முக்கிய தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share