×
 

வெளிநாட்டுக்கு தப்பியோடி இந்தியாவை சீண்டும் மல்லையா, லலித் மோடி!! நாடு கடத்த மத்திய அரசு மாஸ்டர் ஸ்கெட்ச்!

விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோரை திரும்ப கொண்டு வர, வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோரை இந்தியா திரும்ப கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா சமீபத்தில் தனது 70வது பிறந்தநாளை (டிசம்பர் 18) லண்டனில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த விருந்தை லலித் மோடி தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். விருந்தில் இருவரும் ஒன்றாக பங்கேற்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் லலித் மோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். ஒரு வீடியோவில் லலித் மோடி, “நாங்கள் இந்தியாவின் இரு பெரிய தப்பியோடியோர்” என்று கூறி சிரித்துக்கொண்டே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர். இந்தியாவில் பொருளாதார குற்ற வழக்குகளில் தேடப்படும் நபர்கள் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பொதுமக்களும் அரசியல் வட்டாரங்களும் கோபம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரசு நடவடிக்கை எடுக்கைலைனா!! புரட்சி வெடிக்கும்! திருப்பரங்குன்றம் விவகாரம்! எச்சரிக்கும் இந்து முன்னணி!

இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். “பொருளாதார குற்றங்களில் தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியா திரும்ப கொண்டு வர மத்திய அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 

சில வழக்குகளில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துவதற்காக திரும்ப கொண்டு வருவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

விஜய் மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் எடுத்த கடனை திருப்பி செலுத்தாமல் 2016ல் இந்தியாவை விட்டு தப்பினார். லலித் மோடி ஐ.பி.எல். ஊழல் குற்றச்சாட்டுகளால் 2010ல் வெளிநாடு சென்றார். இருவரும் லண்டனில் தங்கியுள்ளனர். இந்தியா அவர்களை திரும்ப கொண்டு வர பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.

இந்த விருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது மத்திய அரசின் முயற்சிகள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. பொருளாதார குற்றவாளிகளை திரும்ப கொண்டு வருவதில் அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானை 2 மணி நேரத்தில் தரிசிக்கனுமா? - இதை மட்டும் செய்தாலே போதும்... தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share