×
 

பிரச்சினையால் முட்டி மோதும் லாலு குடும்பம்... கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்...!

ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு லாலு பிரசாத் யாதவ் முக்கிய அறிவுரை வழங்கினார்.

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக செயல்பட்டவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரான இவர், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி உள்ளார். இப்போது ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியை தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார்.

லாலு பிரசாத் யாதவின் இன்னொரு மகன் தான் தேஜ் பிரதாப் யாதவ். இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் கள்ள உறவில் இருப்பதாக தேஜ் பிரதாப் பகிரங்கமாக கூறியதாக தெரிகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கள்ள உறவு விவகாரம் பூதாகரமானது. 

இதன் காரணமாக, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து நீக்குவதாக லாலு பிரசாத் அறிவித்தார். கட்சி மட்டுமல்லாது குடும்பத்தை விட்டும் விலக்கி வைப்பதாகாவும் லாலு பிரசாத் அறிவித்து இருந்தார். இதனிடையே லாலு பிரசாத் யாதவின் மகளும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். மேலும் தனது சகோதரர் தேஜஸ்வி யாதவ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிங்க: பீகாரின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு...! முக்கிய அறிவிப்பு..!

இந்த நிலையில் குடும்பப் பிரச்சனை விரைவில் பேசி தீர்க்கப்படும் என்றும் யாரும் கவலைக் கொள்ள வேண்டாம் என்றும் கட்சியினருக்கு லாலு பிரசாத் யாதவ் அறிவுரை வழங்கினார். தேர்தல் தோல்வி, உடன்பிறப்புகள் தேஜஸ்வி - ரோஹிணி சண்டை போன்றவற்றால் ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாகக் கருதி இந்த அறிவுரையை வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் நிதீஷ் ஆட்சி..! 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share