×
 

நேற்று தேவாலயம்... இன்று கோயில்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

பழங்காலமாக கண்மாய்  கரையில் இருந்து  வரும் சிறிய கோவில் பகுதியை தவிர்த்து மற்ற புதிய கட்டுமான ஆக்கிரப்புகளை இடித்து அப்புறப்படுத்தலாம் நீதிபதிகள் உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம்  கரங்காடில் உள்ள மரைக்காயர் கண்மாய்  ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் கோவில் கட்டுமானத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு. மரைக்காயர் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்து கட்டபடும் புதிய கோயில் கட்டுமான பகுதியை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம்  கரங்காடு பகுதியை சேர்ந்த செங்கோல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே கரங்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் முக்கிய நீர்நிலை ஆதாரமாக   மரைக்காயர் குளம்  உள்ளது.இப்பகுதி மக்களின் முக்கிய குடி நீர் ஆதாரமாகக் உள்ளது. 

இந்நிலையில் சில தனி நபர்கள் குளத்தில் கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும்  குளத்தை மேடாக்கி அங்கு சட்ட விரோதமாக விநாயகர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கோவில் முற்றிலும் கண்மாய் அளித்து மிக பெரிய கட்டுமானமாக கட்டபட்டு வருகிறது.

இதையும் படிங்க: வேற வழி தெரியல ஆத்தா..! வேம்பு - அரச மரத்துக்கு வினோத கல்யாணம்…! ஆயிரக்கணக்கான 90ஸ் கிட்ஸ்கள் பங்கேற்பு..!!

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்டதில் கிடைத்த தகவல் படி கோவில் கட்டும் பகுதி  நீர்நிலை என்றும், அங்கு எந்த ஒரு கட்டுமானத்திற்கும் அரசு அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தனி நபர் ஆதாயத்திற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோயில் கட்டப்படுகிறது. 

இந்த  கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே கல்வி நிறுவனம் உள்ளது. பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் கல்வி மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது.நீர்நிலை ஆக்கிரமிப்பு   குறித்து  மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 எனவே வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் 'மரைக்காயர் குளத்தை' முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கிளிண்டன் ஆஜராகி, கோவில் கட்டுமான பகுதி முற்றிலும் அரசுக்கு சொந்தமான நீர்நிலை பகுதி என அதற்கான ஆவணங்களையும் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் கட்டுமான புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே அந்த பகுதியில் சிறிய கோவில் இருந்தது என்பதற்கான புகைப்படங்களை காண்பித்தார். 

இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் ஏற்கனவே மிகச் சிறிய அளவில் மட்டுமே அந்த பகுதியில் கோவில் இருந்துள்ளது எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் முறையாக அளவீடு செய்து  கடந்த காலங்களில் இருந்த கோவில் பகுதியை தவிர்த்து மற்ற புதிய ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்ற வேண்டும் மேலும் கண் வாயை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்  என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஆக்கிரமிப்பு சர்ச்சை காரணமாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் கொடைக்கானல் எம் எம் தெரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் நேற்று அதிகாலை 2 மணிக்கு மேல் இடித்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி..! அண்ணாமலையார் கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share