தமிழகமே அதிர்ச்சி... மதுரையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!
மதுரை மேலூர் அருகே பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 18 வயது இளைஞர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், 18 வயது இளைஞர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள அம்பாநகரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். அவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முனீஸ்வரி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த முனீஸ்வரிக்கு, அருகில் வசித்து வந்த அனிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பப்பட்டியில் வயதான ஒருவரை பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் அனிதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “கேரம் போர்டு விளையாடலாம் வா...” - 10 வயது சிறுமியை சீண்டிய மிருகம்... பொளந்தெடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்...!
அதை நம்பிய முனீஸ்வரி, அனிதா கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு மேலூருக்கு வந்துள்ளார். அப்போது, 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அவரை தனது இருசக்கர வாகனத்தில் தும்பப்பட்டி அருகேயுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே காத்திருந்த அந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 4 பேருடன் சேர்ந்து, மொத்தம் 5 பேர் முனீஸ்வரியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் வெள்ளிக் கொலுசையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பித்து வந்த முனீஸ்வரி, அருகில் இருந்த மதுபானக் கடை அருகே இருந்தவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அவர்களது உதவியுடன் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விரைந்து நடவடிக்கை எடுத்து 18 வயது இளைஞர் உட்பட 5 பேரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING அதிபயங்கரம்... கூட்டு பாலியல் தொல்லை செய்யப்பட்ட 3 வயது பச்சிளம் குழந்தை பலி...!!