அதிருப்தியில் தனிக்கட்சி ஆரம்பித்த மல்லை சத்யா... பெயர் என்ன தெரியுமா?
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனிக் கட்சியை மல்லை சத்யா ஆரம்பித்து உள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் துரை வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல், துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து பின்னர் அதை வாபஸ் பெற்றதன் மூலம் வெளிப்பட்டது.
மல்லை சத்யா, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருப்பவர், கட்சியில் துரை வைகோவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் வாரிசு அரசியல் குறித்து அதிருப்தி தெரிவித்தார். வைகோவின் மகனான துரை வைகோ, கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து, 2024இல் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த மோதலின் பின்னணியில், சமூக வலைதளங்களில் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் மற்றும் துரை வைகோவின் ஆதரவாளர்கள் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர். மல்லை சத்யா, வைகோவை தனது உயிரை மூன்று முறை காப்பாற்றியவர் என்றும், தன்மீது துரோகி என்ற பழி சுமத்தப்பட்டது தாங்க முடியாத மனவேதனையை அளித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மல்லை சத்யா தன்னை கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பேராபத்து... ஆதங்கத்தை வெளிப்படுத்திய வைகோ...!
மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் மதிமுகவிலிருந்து மல்லை சத்யாவை வைகோ நீக்கினார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த மல்லை சத்யா தனி கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் திராவிட வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்து தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: வைகோவுக்கு இப்படியொரு நிலை வரணுமா? - 14 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்...!