×
 

"விஜய்"..! ஒத்த ஆள எதிர்த்து ஒரே நைட்ல ஒன்னாகிட்டாங்க..! மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

விஜய் என்ற ஒற்றை ஆலை எதிர்த்து திராவிட கட்சிகள் இணைந்ததாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்தார்.

தமிழக அரசியலில் நீண்ட காலமாக நிலவி வந்த இரு திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் உருவானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்தப் புதிய கட்சியை மையமாக வைத்து அதிமுக மற்றும் திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள், பதிலடிகள் மற்றும் வார்த்தைப் போர்கள் நடைபெற்றன. இது சமூக ஊடகங்களில் இருந்து அரசியல் மேடைகள் வரை விரிவடைந்தது. 

தவெக தொடங்கிய காலத்திலிருந்தே திமுக தரப்பில் இருந்து விஜய் மற்றும் அவரது கட்சியை “அனுபவமற்றவர்”, “தெளிவான கொள்கை இல்லாதவர்”, “சினிமா புகழைப் பயன்படுத்தி அரசியல் செய்பவர்” என்று விமர்சித்து வந்தனர். விஜய் தனது பிரசாரங்களில் திமுக ஆட்சியை “ஊழல்”, “மக்களை ஏமாற்றும்” என்று சாடியபோது, திமுக தலைவர்கள் அவருக்கு தெளிவான சித்தாந்தம் இல்லை என்று பதிலடி கொடுத்தனர். தேர்தல் நெருங்கியபோது, அதிகார இயந்திரத்தைப் பயன்படுத்தி தவெக பிரசாரத்துக்கு இடையூறு செய்வதாக விஜய் குற்றம் சாட்டினார். 

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்கும் முயற்சிகளுக்கு இடையூறு செய்ய திமுக-அதிமுக கூட்டணி முயல்வதாக விஜய் தரப்பு சந்தேகம் எழுப்பியது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்., ஒரே இரவில் ஒன்றானார்கள் என்றார். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.

இதையும் படிங்க: விருதுநகரில் விஜயபிரபாகரன் தான் ஜெயிப்பார்..!! அடித்துச் சொல்லும் மாணிக்கம் தாகூர்..!!

விஜய் என்ற ஒரே ஒரு மனிதனை நிறுத்த இந்த செயலை ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனை தெளிவாக பார்த்த காங்கிரஸ் வெளியேறியது என்றும் கூறினார். RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது என்றும் “நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி எனவும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது என்றும் திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? எனவும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: தவெகவை காப்பாற்ற முடியாது..! "ஓட்டை கப்பல்"..! அதிமுக கோவை சத்யன் கருத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share