அதிருப்தி... அவ்ளோ சொல்லியும் கேட்கல..! திமுகவில் இணைந்த மாணிக்கராஜா பரபரப்பு பேட்டி..!
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்ததன் அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்திருப்பதாக மாணிக்கராஜா தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் நம்பிக்கை கரமாக இருந்த மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிருப்தியின் காரணமாக திமுகவில் இணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் ஒன்றை வகித்தவர்களில் S.V.S.P. மாணிக்கராஜா ஒருவர். கடம்பூர் இளைய ஜமீன்தார் என்று அழைக்கப்படும் அவர், கயத்தாறு ஒன்றியக் குழு பெருந்தலைவராகவும், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட தென் மண்டலப் பகுதிகளில் கட்சியின் அமைப்புப் பணிகளை முன்னின்று செய்தவர் இவர்.
அமமுக தொண்டர்களிடையே நல்ல செல்வாக்கு கொண்டிருந்ததோடு, புதிய உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட அளவிலான கூட்டங்கள் என பல்வேறு கட்சி நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பல்வேறு கட்சி அறிவிப்புகளிலும் அவரது பெயர் துணைப் பொதுச் செயலாளராக இடம்பெற்றிருந்தது. டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் அவர் இடம்பிடித்திருந்தார். கயத்தாறு பகுதியில் கழகத்தின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு கணிசமாக இருந்தது. கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட காரணமாக இருந்தவர் மாணிக்கராஜா என்பது குறிப்பிடத்தக்கது. அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மீண்டும் இணைந்ததால் அதிருப்தி தெரிவித்தார். நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் என்டிஏ வை ஆதரித்து செல்லும்போது தங்கள் எதிர்ப்புகளை கூறும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர் என்ற முறையிலும் பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை என்று தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியதற்கு அர்த்தமே இல்லாமல் போனதால் அதிருப்தியின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலை விரித்து ஆடும் போதை... ஒதுங்கி நிற்கும் மாநில அரசு... வெளுத்து வாங்கிய TTV..!
நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை ஏற்று மூன்று மாவட்டச் செயலாளர்களுடன் திமுகவில் இணைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். என்னென்ன அழுத்தங்கள் இருக்கிறது என்பது குறித்து தங்களிடம் டிடிவி தினகரன் கூறவில்லை என்றும் கொள்கையே இல்லாமல் போனதால் அங்கு தொடர்வது அர்த்தமில்லை என்று கருதியதாக தெரிவித்துள்ளார். இது நமக்கு ஆபத்தில் முடியும் இன்று பலமுறை சொல்லியும் கேட்காமல் தேசிய ஜனநாயக கூட்டணி அமைதி இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஏமாற்றப்பட்டாரோ அல்லது சூழ்நிலையோ ஆனால் தங்களுக்கு இந்த முடிவு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீதிக்கு வீதி கொலை... இந்த விடியா ஆட்சி வேண்டுமா?... விளாசிய அதிமுக..!