“காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...!
போராட்டத்திற்கு பிறகு இன்று மாலை தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை
பொதுமக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனையை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - இன்று நடந்த போராட்டத்திற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு சங்கமும், அனைத்து மாநில சங்கங்களும் ஒருங்கிணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் - போராட்டத்திற்கு பிறகு இன்று மாலை தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை
பொதுமக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனையை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள சுமார் 280 மருந்து கடைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 280 மருந்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறை காத்திடவும், உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவும், போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவுகளையும் தடுத்து நிறுத்திட ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இன்று ஒரு நாள் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு இன்று மாலை பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலை சிவம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் மருந்துக்கடைகள் மூடல்... ஆனாலும் இந்த மருந்துகள் மட்டும்... வணிகர்கள் கொடுத்த ஒரே ஒரு ஆறுதல்...!
அப்போது அவர் கூறுகையில் மத்திய, மாநில அரசுகள் தேவையில்லாத சட்டங்களைப் போட்டு மருந்து வணிகர்களை பயமுறுத்துவதை விட்டுவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் அநியாயத்தையும், அவர்களது முறையற்ற வியாபாரத்தையும் தடுக்க உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனையை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய தினம் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியுள்ளோம். இந்தப் போராட்டத்திற்கு பிறகும் ஒன்றிய, மாநில அரசுகள் ஆன்லைன் மருந்து விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்நாடு சங்கமும், அனைத்து மாநில சங்கங்களும் ஒன்றிணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: மருந்துக் கடைகள் Strike… நோயாளிகள் கவலை வேண்டாம்... சிறப்பு ஏற்பாடு!