×
 

“திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

தவெக ஆட்சியில் ஆவின் நிறுவனத்திற்கு மூடு விழா நடத்துவது நிச்சியம் என்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் காட்டம். 

பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு குறித்த தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் இந்த அறிவிப்பை கண்டித்து நாளை முதல் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொடுப்பது குறைக்கப்படும் என்றும் , வரும் 24ம் தேதி முதல் அறிவித்தப்படி  பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன்   உறுதி. தவெக ஆட்சியில் ஆவின் நிறுவனத்திற்கு மூடு விழா நடத்துவது நிச்சியம் என்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் காட்டம். 

பாலூக்கான கொள்முதல் விலையை உயர்த்தாமல் பால் உற்பத்தியாளர்களை தனியார் நோக்கி செல்ல வைக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு  பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் கடும் கண்டனம்

 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர்  ராஜேந்திரன் இன்று மாலை  சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிங்க: கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!

 அவர் கூறும்போது,  கால்டை தீவனங்களின் விலை ஏற்றத்தின் காரணமாக பால்  உற்பத்திக்கான செலவு  அதிகரித்து விட்டது.  எனவே  பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்திட வேண்டும் என்று கடந்த இரண்டு மாதமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 
மேலும் நேற்று பாலுக்கான கொள்முதல் விலையை ஏற்கனவே தேர்தலின் போது தமிழக வெற்றிக்கழகம் தனது வாக்குறுதியில் தெரிவித்தபடி பசும் பாலுக்கு 45 ரூபாயும் எருமை பாலுக்கு 60 ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
 பால் நிறுத்தும் போராட்டத்தையும் அறிவித்திருந்தோம் . 
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கொள்முதல் விலையை மூன்று உயர்த்தி அறிவித்திருப்பது தங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் , தனியார் பால் நிறுவனங்கள் பத்து ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உயர்த்தி இருக்கும் இந்த தொகையானது போதுமானதாக இல்லை என்றும் ,  தேர்தல் வாக்குறுதியில் விஜய் கூறியபடி ,  லிட்டருக்கு 45  ரூபாய் என்பதை  வழங்கிட வேண்டும் என்ற அவர் ,  வாக்குறுதி அளித்ததை கூட வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்றார்.  தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கண்டித்து ,  நாளை முதல் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்குவதை  குறைப்போம்  என்றும் ,  வரும் 24ம் தேதி முதல் திட்டமிட்டபடி 
பால் நிறுத்த போராட்டம் நிச்சயம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: அமித் ஷாவை நேரில் சந்தித்த சி.எம்.விஜய்... 30 நிமிடம் பேசியது என்ன?... வெளியானது முக்கிய தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share