அப்பாடா...!! நிம்மதி பெருமூச்சுவிட்ட திமுக... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்...!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரர்கள் மீதான அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக சொத்து குவிப்பு வழக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்து உள்ள நிலையில் வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது தற்போது இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
இதையும் படிங்க: இன்னும் 4 மாசம் குடுப்பீங்க... உங்க நாடகம் எல்லாருக்கும் தெரியும்..! விளாசிய அதிமுக..!
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் யாரும் ஆஜராகாத நிலையில் அவரது மூன்று மகன்களில் ஒருவரான அனந்த மகேஸ்வரன் மட்டும் ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி வசந்தி இந்த வழக்கின் விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: ₹11,718 கோடி ஒதுக்கீடு - டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சாதிவாரி கணக்கு!