×
 

கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

சரக்கு மற்றும் சேவை வரி, பதிவுத்துறை, கனிமவளம் போன்றவற்றின் சீரமைப்பின் மூலம் 15,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற கருத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் விளக்கம்

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் மரியவில்சன் பதிலளித்தார்.  அப்போது அதிமுஜ பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிதி அமைச்சர் நல்ல விளக்கத்தைக் கொடுத்தார். இது ஒரே ஒரு வெரிபிகேஷன். 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் சொந்த வரி ரூபாய் 2,29,579 கோடி. 2026-27 திருத்த பட்ஜெட்டில் சொந்த வரி ரூபாய் 2,26,740 கோடி.

இப்பொழுது அவர்கள் தெரிவிக்கின்றபொழுது ஆயத்தீர்வை வருவாய் 1,000 கோடி கூடுதலாக வந்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி, பதிவுத்துறை, கனிமவளம் போன்றவற்றின் சீரமைப்பின் மூலம் 15,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று சொல்கிறார்.

அப்படியென்றால், 2026-27 திருத்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2,26,740 கோடியில் சுமார் ரூ.15,000 கோடியைச் சேர்த்தால், திருத்த பட்ஜெட்டில் அதிகமாக வருவாய் வந்திருக்க வேண்டும். அதை நிதி அமைச்சர் விளக்கினால் சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பினர். 

இதையும் படிங்க: சி.எம். விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... சட்டப்பேரவையை தெறிக்கவிட்ட ‘அந்த’ ஒற்றை வார்த்தை...!

அது குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சியைச் சேர்ந்த அவர் சொன்னதுபோல் சப்ளிமென்ட்ரி அக்கவுண்ட்ஸை எடுத்துப் பாருங்கள்.

2025-26 ஆக்சுவல்ஸில் எஸ்.ஓ.டி.ஆர். மட்டும் நான் சொல்கிறேன். ரூ.1,92,493 கோடி. ஆனால் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டில் 2026-27-ல் திமுக அரசு தாக்கல் செய்துவிட்டுப் போனது ரூ.2,29,579 கோடி.

நார்மலாக 8 சதவீதம், 7 சதவீதம் இருந்த வளர்ச்சி விகிதத்தில், இரண்டு ஆண்டுகளில் இவர்கள் ஒரே ஹைக்காக 19 சதவீதம் போட்டு வைத்திருந்தார்கள். 19 சதவீதம் என்பது ஹைலி நாட் பாசிபிள். அப்படி வருவதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்றால், எங்களுடைய ப்ரொஜெக்டட் ரெவின்யூவில் இப்போது தாக்கல் செய்துள்ள இடைக்கால திருத்த பட்ஜெட்டில் 11 சதவீதம் ஆவரேஜாக, பிசினஸ் அஸ் யூஷுவல் என்று சொல்லிவிட்டு நாங்கள் போட்டிருக்கிறோம். 11.7 சதவீதம் என்ற அடிப்படையில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 740 கோடி அந்த அளவில் நாங்கள் போட்டிருக்கிறோம்.

இதில் நாங்கள் அடிஷனல் ரிசோர்ஸுக்கு என்ன செய்திருக்கிறோம் என்றால், ஒரு ரூ.5,000 கோடி ஜி.எஸ்.டி.யிலும், ரூ.5,000 கோடி ஸ்டாம்ப்ஸ் அண்ட் ரெஜிஸ்ட்ரேஷனிலும், ரூ.1,500 கோடி எக்சைஸ் டூட்டியிலும், பிளஸ் மோட்டார் வெஹிக்கிள் டேக்ஸில் ரூ.750 கோடியும் நாங்கள் அடிஷன் பண்ணியிருக்கிறோம்.

அப்போது ரூ.11,750 கோடி அடிஷனலாக நாங்கள் கெயின் பண்ணிவிடுவோம். கடந்த 60 நாட்களில், தேங்க்ஸ் டு ஹானரபிள் சீஃப் மினிஸ்டர், இந்த முயற்சிகளை எடுத்ததற்கு.

அதன் அடிப்படையில்தான் நாங்கள் ரூ.2,26,740 கோடி என்று சொல்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நிறைய டிஸ்கஷன். நான் சொல்ல விரும்புகிறேன் என்றார். 

இதையும் படிங்க: நிதி கசிவு முதல் 13 லட்சம் காலிப்பணியிடங்கள் வரை..! தவெக அரசை கேள்விகளால் திணறடித்த EPS..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share