×
 

"தமிழுக்கே முன்னுரிமை"..! அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அமைச்சர் ராஜ்மோகன்..!!

தமிழுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார்.

மக்களே ஜனநாயகத்தின் நாயகர் என்ற பேரறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி, 1967-ல் அண்ணா, 1977-ல் MGR-க்கு பிறகு 2026-ல் வரலாற்று புரட்சி நடந்திருப்பதாக ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தி உள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்கள் பெயர்களை குறிப்பிட்டும் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். 

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றார். இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய் என்றும் குறிப்பிட்டு பேசி இருந்தார். சுமூகமான முறையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்ற நிலையில் பேரவை வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விவரித்தார்.

இதையும் படிங்க: முத்தமிழறிஞருக்கு புகழஞ்சலி..! கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

அப்போது, தமிழகத்தில் தமிழுக்கு முதலிடம் அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட்டது என்றும் குறிப்பிட்டார். பல நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாகவும் ஆனால் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டு பிள்ளைகளின் DNAவில் இருக்கு!” - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share