அறநிலையத்துறை அமைச்சரின் அடுத்த தரமான சம்பவம்... பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் அதிரடி ரெய்டு...!
பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கட்டாயம் விலை பட்டியல் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், பூஜை பொருட்கள் விலையை கூடுதலாக சொல்லி சிக்கிக்கொண்ட கடைக்காரர்கள்.
அழகர்கோவில் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ். பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கட்டாயம் விலை பட்டியல் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், பூஜை பொருட்கள் விலையை கூடுதலாக சொல்லி சிக்கிக்கொண்ட கடைக்காரர்கள்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவில், ராக்காயி அம்மன் திருக்கோயில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் இன்று மாலை ஆய்வு செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்கள் விற்கும் கடையில் ஆய்வு செய்த அமைச்சரிடம் பூஜை பொருட்களின் விலையை கடைக்காரர் கூடுதலாக சொன்னதால் அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக கடை முன்பு விலை பட்டியலை உடனடியாக வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் இன்று மாலை அழகர் கோவிலில் உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவில் ராக்காயி அம்மன் திருக்கோயில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 18-ம் படி கருப்பண்ணசாமி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் பூஜை பொருள் வாங்குவது போல சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். வ
இதையும் படிங்க: பழனி கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் ரமேஷ்... பக்தர்களுக்கு பகிர்ந்த முக்கிய தகவல்...!
வந்திருப்பது அமைச்சர் என தெரியாமல் கடையில் இருந்த பெண்மணி பூஜை சாமான்களின் விலையை கூடுதலாக சொன்னதால் கோபமடைந்த அமைச்சர் உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். அதிகாரிகள் பூஜை பொருட்களின் விலை ரூ.100 எனவும் கடைக்காரர் ரூ.200 எனவும் மாறிமாறி கூறியதால் கோபமுற்ற அமைச்சர் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் பார்வைக்காக ஒவ்வொரு கடையிலும் பூஜை பொருட்களின் விலை பட்டியலை எழுதி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்ட அமைச்சர் அதிகாரிகள் பொருட்கள் சரியான விலையில் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு உரிய ஊதிய மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என அமைச்சரிடம் முறையிட்டனர் அதனை கேட்டுக் கொண்ட அமைச்சர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்த அமைச்சர் முழு தரவுகளுடன் செய்திக் குறிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து கோவில் இருந்து புறப்பட்டு சென்றார்.
பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம் செய்த போது அமைச்சருக்கு வழங்கப்பட்ட மரியாதையை போலவே உடன் வந்திருந்த தவெக நிர்வாகியான லயோலா மணி என்பவருக்கும் மாலை மரியாதை வழங்க வேண்டும் என தவெக வினர் கோவில் பணியாளர்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ரமேஷ் ஐயங்கார்"... அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அறநிலையத் துறை அமைச்சர் கண்டனம்..!