×
 

பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சால் வெடித்த சர்ச்சை! அமைச்சர் சம்பத்குமார் கொடுத்த ‘செக்’ பதில்!

தமிழக முதலமைச்சர் விஜய் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அளவில் முன்னோடியாக திகழ்ந்து வருவதாக அமைச்சர் சம்பத்குமார் குறிப்பிட்டார்.

கோவை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக அவர் அவ்வாறு பேசியிருக்கலாம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட நிகழ்ச்சியாகவே பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

கோவை மாவட்டம் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனைக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தீபாவளி சிறப்பு விற்பனையில் கைத்தறி பொருட்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு ரூ.2 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ.3 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தலைமை பண்பு குறித்து பேசிய கருத்து தொடர்பான சர்ச்சை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட நிகழ்ச்சியாகவே பார்ப்பதாக கூறினார். பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக இதுபோன்ற கருத்துகளை விஜய் சேதுபதி பேசியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அளவில் முன்னோடியாக திகழ்ந்து வருவதாக அமைச்சர் சம்பத்குமார் குறிப்பிட்டார்.

மழைக்காலம் நெருங்கும் நிலையில், 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்காக மாநகரப் பகுதிகளில் தோண்டப்படும் சாலைகள் முறையாக மூடப்படாமல் இருப்பதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். கடந்த காலங்களில் பணிகள் முடிந்த பின்னர் நீண்ட காலத்துக்கு பிறகே சாலைகளை சீரமைக்க டெண்டர் விடும் நடைமுறை இருந்ததாகவும், இதனால் பல இடங்களில் சாலைகள் மோசமடைந்ததாகவும் தெரிவித்தார். தற்போது பணிகள் முடிந்த உடனேயே சாலைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

திமுக போராட்டத்தின்போது உரிமையில் பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு, மக்கள் தேவைகள் தொடர்பான கருத்துகளை எங்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்றும், ஒருமையில் பேசுவது உள்ளிட்ட தனிநபர் விமர்சனங்களுக்கு மக்கள் ஏற்கனவே பதில் அளித்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: துரோக பட்டம் சூட்டுகிறார்கள்! துரோகி என்கிறார்கள்! திமுகவை விட்டு விலகியது ஏன்? திருமாவளவன் காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share