×
 

இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

இந்தியா கூட்டணியில் இணைவது தொடர்பாக முதல்வர் விஜய் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முதல் முறையாகப் போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்த நிலையில், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் தவெக இன்னும் முழுமையாக இணையாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தற்செயலானது அல்ல. பல அரசியல், உத்திய மற்றும் கட்டமைப்பு காரணங்களால் உருவான சூழல்.

தவெகவின் உருவாக்கம் முதல் அதன் அரசியல் நிலைப்பாடு வரை பார்க்கும்போது, கட்சி தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முயன்றது. 2024-இல் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, தமிழ்நாட்டு அரசியலில் பாரம்பரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய சக்தியாக வளர்ந்தது. தேர்தலுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும், தவெக தலைவர் விஜய் “மக்களுடன் கூட்டணி” என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுகள் நடந்தன என்றாலும், முழு கூட்டணி இல்லாமலேயே தேர்தலைச் சந்தித்தது. இந்த சுயேச்சை அணுகுமுறை தவெகவுக்கு வெற்றியைத் தந்தது. 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இது திமுக-காங்கிரஸ் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. பல தசாப்தங்களாகத் தொடர்ந்த கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்ததால், திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையுமா என்ற பேச்சுக்கள் அடிபட்டன. இந்த நிலையில் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைவது தொடர்பாக முதல்வர் விஜய் அறிவிப்பாரு என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! முதல்வர் விஜய்யை சந்திக்கும் அன்புமணி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

மத்திய அரசு தமிழகத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியை தந்துள்ளது என செங்கோட்டையன் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் வந்துள்ளது என்றார். பத்திரப்பதிவில் உள்ள தேக்கங்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சாதி சான்றிதழ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: போலீசாருக்கு SPECIAL ட்ரீட்...? சிங்கப்பெண் படை தொடக்க விழாவில் விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share