வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்... அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!
ஆன்லைன் மதுபான விற்பனை தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் கொடுத்தார்.
தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்ற தகவல் சமீப காலமாக சமூக ஊடகங்களிலும் பொதுமக்களிடையேயும் பரவலாக உலாவி வருகிறது. இந்த வதந்தி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் புதிய ஆன்லைன் முன்பதிவு அமைப்பு தொடர்பாக எழுந்த குழப்பத்திலிருந்து உருவானது.
டாஸ்மாக் நிறுவனம் இணையதளம் மூலம் மதுபான முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபான வகைகளை ஆன்லைனில் தேர்வு செய்து, விலைகளைப் பார்த்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். முன்பதிவு முடிந்ததும் ஒரு க்யூஆர் கோடு கிடைக்கும்.
அந்த கோட்டைக் கொண்டு அருகிலுள்ள அல்லது தேர்ந்தெடுத்த டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுபானத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். கடைக்குச் சென்றுதான் வாங்க முடியும் என்பது இதன் அடிப்படை விதி.இந்த அமைப்பு நீண்ட வரிசைகளில் நிற்கும் அவசியத்தைக் குறைப்பதற்கும், கடைகளில் அதிக விலை வசூலிக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், இருப்பு விவரங்களை வெளிப்படையாகக் காட்டுவதற்கும் கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க: ஏன் இந்த அவசர மனு..?? டி.கே சிவக்குமாரை இணைத்து திமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார்..!!
ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்யலாம் என்ற விவகாரம் தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். ஆன்லைன் முன்பதிவு என்பது சோதனை அடிப்படையில் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல் எனவும் அமைச்சர் விக்னேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். வீடு தேடி மதுபானம் என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு கடையில் சென்று தான் மதுவை வாங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்ற தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார். அனைத்து வகையான மதுபானங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று கூறியுள்ளார். ஊழலை குறைத்தாலே அரசிற்கான வருவாய் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஸ்டாலினின் whatsapp அரசியல்...! மக்களை குழப்பாதீங்க..! அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்..!!