நெல்லையில் புதுபாலம்.. பணிகளை தொடங்கி வைத்த நயினார் நாகேந்திரன், ராபர்ட் ப்ரூஸ்..!
நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் இருதுருவங்களாக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏவும் ராபர்ட் புரூஸ் எம்.பியும் இணைந்து 36 கோடி மதிப்பிலான பாலம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் அருகே திருநெல்வேலி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது இந்த விபத்தினை தடுக்கும் வகையில் சிப்காட் அருகே உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் வைக்கப்பட்ட தொடர் கோரிக்கையின் எதிரொலியாக ரூபாய் 36 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டது.
அதற்கான தொடக்க விழா இன்றைய தினம் கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெற்றது இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிப்காட் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் பாலம் கட்டுமான பணியை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்.. பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வலியுறுத்தல்!
இதேபோல் பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லும் ஒரே விழாவில் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் ப்ரூஸும் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் எதிரெதிர் துருவங்களாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் தொடர்..! 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி..!