×
 

பரபர அரசியல் களம்! பிரதமருடன் நயினார் பேசிய முக்கிய விவகாரம்..!

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை விடுவிக்கப்பட்டு அந்த பொறுப்பிற்கு நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். 

டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டின் அரசியல் சூழல், பாஜக அதிமுக கூட்டணி விவகாரம், கட்சியின் வளர்ச்சி பணி, சட்டசபைகளுக்கான ஏற்பாடுகள், உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி.. விளாசிய கார்கே!

ஏற்கனவே, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசி உள்ளார். தமிழக அரசுக்கும் மத்திய பாஜகவிற்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் நைனார் நாகேந்திரனின் பிரதமருடனான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பத்மபூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்..! ஜனாதிபதி திரவுபதி முர்மு கௌரவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share