மோன்தா புயல் சென்னையை நெருங்கியாச்சு... உஷார் மக்களே...! அடிச்சு நகர்த்தப்போகுது...!
மோன்தா புயல் சென்னைக்கு 560 கிலோமீட்டர் தொலைவில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நெருங்கி வருகிறது.
வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக உருமாறிய நிலையில், அது தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு வடமேற்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல் நாளை ஆந்திரா மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடக்கும் எனக்கூறப்படுகிறது. அது கரையை கடக்கும் பொழுது அதனுடைய வேகம் என்பது 100 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. புயலுடைய வேகம் என்பது கடலில் அதாவது நீர் மேற்பரப்பில் இருக்கும் பொழுது அதனுடைய வேகத்தை காட்டிலும், தரைக்கும் வரும் போது இன்னும் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில்தான் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகரக்கூடிய அந்த புயலின் வேகம் என்பது நாளை ஆந்திரா மாநிலத்தில் கரையைக் கடக்கும் போது, 100 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது.
இதையும் படிங்க: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... அடிச்சு நொறுக்கப்போகும் மழை..!
இதனிடையே, சென்னையிலிருந்து 560 கிலோமீட்டர் தொலைவில் 16 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது வரைக்கும் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோன்தா புயல் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நாளை இரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பகீர் வானிலை அலர்ட்… இன்று மாலையே உருவாகிறது மோன்தா புயல்… எச்சரிக்கை…!