இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே... விடிந்ததும் மாணிக்கம் தாகூர் கொடுத்த அதிர்ச்சி... ஆடிப்போன காங்கிரஸ் தலைமை... !!
திமுக கூட்டணி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் மாநில தலைமைக்கும் டெல்லி தலைமைக்கும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்ற வகையில் தான் அவருடைய செயல்பாடு இருந்து வருகிறது
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ள பாரதி பாடலால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் காங்கிரஸ் தலைமைக்கு மாணிக்கம் தாக்கூர் சவால் விடும் வகையில் இதை பதிவிருக்கிறாரா அப்படின்ற ஒரு கேள்வியும் எழுந்திருக்கிறது.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ்தளத்தில் பதிவை ஒன்று பதிவிட்டுருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நறைக்கூடிய கிழப்பருவம் எழுதி கொடுங்கூற்று கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்ற பாரதியார் பாடலை அங்கு மேற்கொள்ளிட்டு பதிவிட்டிருக்கிறார்.
குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பாக மதுரையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் கண்டிப்பாக திமுக கொடுக்கக்கூடிய அந்த விமர்சனங்களுக்கு நிச்சயமாக நாங்கள் பதிலடி கொடுப்போம். எங்களால் சும்மா இருக்க முடியாது. அதேபோல மதுரை வடக்கு தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது தொடர்பாக ஒரு பெரும் சர்ச்சையானது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாணிக்கம் தாக்கர் மீது புகார் கொடுக்க நேரடியாக பெங்களூரு சென்று அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேயிடம் புகார் எல்லாம் கொடுத்தார்.
இதையும் படிங்க: அச்சமில்லை! அச்சமில்லை!! காங்., எம்.பி கறார்! திமுக கூட்டணிக்கு ஆட்டம் காட்டும் மாணிக்கம் தாகூர்!
நேற்றைக்கு காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அப்போது பேசிய அவர், திமுகவுடன் எங்களது கூட்டணி தொடர்கிறது. நாங்கள் பேச்சு வார்த்தைக்காக காத்திருக்கிறோம். 22 ஆம் தேதி பேச்சு வார்த்தை என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். அதேபோல மிக முக்கிய தீர்மானமாக கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது, பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே டெல்லி தலைமை இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தாலும் கூட மாணிக்கம் தாக்கூர் தொடர்ந்து இதுபோன்று தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். எந்த அளவிற்கு அகில இந்திய தலைமைக்கு நெருக்கமான நபராக பார்க்கப்பட்டாரோ, மாணிக்கம் தாகூர் அதே அளவிற்கு ராகுல் காந்திக்கு மிக மிக நெருக்கியமான நபராக பார்க்கப்பட்டார். ஆனால் தற்போது இந்த திமுக கூட்டணி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் மாநில தலைமைக்கும் டெல்லி தலைமைக்கும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்ற வகையில் தான் அவருடைய செயல்பாடு இருந்து வருவதாக காங்கிரஸ் கட்சியினே விமர்சனம் செய்கிறார்கள்.
ராகுல் காந்திக்கு மிக நெருங்கிய நபராக இருக்கக்கூடிய மாணிக்கம் தாக்கூர் இப்படி தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல தனது டெல்லி தலைமைக்கும், மாநில தலைமைக்கும் சவால் விடக்கூடிய வகையில் தான் அவருடைய பதிவு என்பது அமைந்திருக்கிறது. குறிப்பாக நேற்றைக்கு கூட அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியாருடைய வரிகளை பதிவிட்டிருந்தார்.
குறிப்பிட்டும் அவர் பேசியிருந்தார். காங்கிரஸ் உடைய தேசிய தலைமை பொதுவெளியில் இது குறித்து பேசக்கூடாது என்று சொல்லியும் கூட அதற்கு மறுநாளே காங்கிரஸ் தலைமைக்கே சவால் விடக்கூடிய வகையில் மாணிக்கம் தாக்க பேச்சு என்பது அமைந்திருக்கிறது. ஒருவேளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நாம் நெருக்கமாக இருக்கிறோம். நம்மை யாரும் யாரும் நம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற ஒரு துணியில் அவருடைய அந்த கூற்றுகள் அமைந்திருக்கிறதா என்பது குறித்து பார்க்க வேண்டி இருக்கிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....!