×
 

நாளை விஜய் பிரச்சாரம்... நாகையில் காவல்துறை விதித்த 20 கட்டுப்பாடுகள் என்னென்ன?

புத்தூர் அண்ணா சிலை பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சுற்றுப்பயணத்தில் பிசியாக களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். கடந்த 13ம் தேதி திருச்சியில் முதல் முறையாக தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கினார். திருச்சியை தொடர்ந்து அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யாமல் திரும்பிவிட்டார். அதிக அளவில் கூட்டம் கூடுவதால் விஜயின் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

நாளை நாகையில் புத்தூர் ரவுண்டானாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சார மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி புத்தூர் அண்ணா சிலை பகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாகை எஸ்பியிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தூர் அண்ணா சிலை பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

  • மதியம் 12:25 முதல் ஒரு மணி வரை நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்
  • வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது 
  • விஜய் செல்லும் கேரவன் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம் கார் அல்லது நடந்தோ செல்லக்கூடாது. 
  • விஜய் பயணம் செய்யும் சாலையில் பிரதான இரண்டு கட்சிகள் இருப்பதால் அங்கு பிரச்சனைகள் வராத வண்ணம் தன்னார்வலர்களை வைக்க வேண்டும் 
  • பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். 
  • பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ள வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் 
  • பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் கம்பு குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது 
  • பரப்புரை என்பது அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது அப்படி ஏற்படுத்தினால் அந்த கட்சியினரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் 
  • புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரயில்வே கேட்டிருப்பதால் ரயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது 
  • புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா பெரியார் சிலை தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது 
  • உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற சாலைகளிலும் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிப்பு

இதையும் படிங்க: அடப்பாவிகளா? தவெக கட்சிக்கொடியில் திடீர் கலர் மாற்றம்... விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த நாகை நிர்வாகிகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share