உள்ளூர் உற்பத்தியை கண்டுக்காம வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வராராம்! என்ன பயன்? முதல்வரை விளாசிய நயினார்…!
நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை கிடங்கு அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றி வருவதாக ஆட்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். திராவிட மாடல் அரசு திறம்பட செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவிக்கின்றனர். 90 சதவீதத்திற்கும் மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறப்படும் நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவே இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்.
வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததாகவும் அதனை நிறைவேற்றவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தொழில்வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தின் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியை மீட்டெடுக்கவும், அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உங்கள் அரசு என்ன செய்தது என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: குடி தான் எல்லாத்துக்கும் காரணம்..! பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்... விசிக வலியுறுத்தல்...!
முட்டை உற்பத்தி உச்சத்தை அடைந்த போதிலும் கடும் வெப்பநிலை காரணமாக முட்டைகள் சேதமடைந்து, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதே இதுதான் திமுக அரசின் நிர்வாக லட்சணமா என்றும் கேட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் முளைப்பு கட்டி வீணாகின்றன, கொங்கு மாவட்டங்களில் முட்டைகள் அழுகிப்போகின்றன என்றும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு முதலீடுகளை ஈர்க்க நீங்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில் யாருக்கு என்ன பயன் எனவும் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: இதனால பெரிய குழப்பம்... சும்மா கணக்கு காட்டுறாங்க..! SIR விவகாரத்தில் NR இளங்கோ காட்டம்...!