×
 

அறிவாலயத்தில் அவியல்... கமலாலயத்தில் சாம்பார்..!! மக்கள் பனையூர் பக்கம்... நாஞ்சில் சம்பத் உறுதி..!!

வாக்காளர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தான் ஆதரவு அளிப்பதாக நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை முதன்முதலில் எதிர்கொள்ளும் நிலையில், மக்கள் ஆதரவு கணிசமாக உள்ளதாக பல்வேறு தரப்புகளில் இருந்து கூறப்பட்டு வருகிறது. விஜய் தன்னை மக்களுக்கான சக்தியாகவும், ஊழலுக்கு எதிரான தூய்மையான சக்தியாகவும் முன்வைத்து வருகிறார். 2026 தேர்தலை "விசில் புரட்சி" என்று அழைத்து, திமுகவை "தீய சக்தி" என விமர்சித்து, தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேயே நேரடி போட்டி என்று அவர் அறிவித்துள்ளார்.

இது மக்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மண்டல மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்புகளில் காட்டப்படும் கூட்டம் மற்றும் உற்சாகம், ஆதரவின் அளவை பிரதிபலிக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு பிரச்சாரங்களிலும் திமுக மற்றும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக திமுகவையே அவர் கடுமையாக சாடி வருகிறார்.

விஜய்யின் பிரச்சாரத்தில் ஊழல் ஒழிப்பு, மக்கள் நலன், தமிழ் உணர்வு போன்றவை முன்னிலைப்படுத்தப்படுவதால், பாரம்பரிய திராவிடக் கட்சிகளிடம் ஏமாற்றம் அடைந்தவர்களின் ஆதரவு தவெகவை நோக்கி திரும்பியுள்ளது. இருப்பினும், சில எதிர்க்கட்சி தலைவர்கள் தவெகவுக்கு ஆதரவு குறைவு என விமர்சிப்பதும் உண்டு. 

இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல்..!! அதிமுக சார்பில் அன்புமணி, தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்..!!

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் வருகை குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து கூறினார். அறிவாலயத்தில் அவியல் தயாராகி விட்டது என்றும் கமலாலயத்தில் சாம்பார் தயாராகி விட்டது எனவும் விமர்சித்துள்ளார். வாக்காளர்கள் பனையூர் நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அந்த நாளில் All roads lead to Rome , இந்த நாளில் All Roads lead to Panaiyur என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத், வெல்க தமிழக வெற்றிக்கழகம் என்றும் வாழ்க தளபதி விஜய் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share