நெல்லையில் உச்சக்கட்ட பரபரப்பு... தேவர் சிலை பீடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... போலீஸ் குவிப்பு...!
நெல்லையில் நள்ளிரவில் தேவர் உருவப்படம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது
நெல்லை ஸ்ரீபுரம் அருகே ஊருடையார்புரம் என்ற பகுதி உள்ளது. 2 சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் இந்த பகுதிகளில் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதில் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் நகரின் முக்கிய பகுதியான ஊருடையார் புரத்தில் முத்துராமலிங்க தேவர் உருவப்படம் ஒன்றை வைத்து வழிபாடு நடத்தி வந்திருக்கின்றனர்.
நேற்று நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை எடுத்து அந்த தேவர் உருவப் படத்தின் அருகே வீசி உள்ளனர்.
இதையும் படிங்க: கண் இமைக்கும் நேரத்தில் கோரம்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!
இதைக் கண்ட அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் ஜங்ஷன் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் தற்பொழுது அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் இந்த பகுதியில் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய நிலையில் அதே ஊருடையார் புரம் பகுதியைச் சார்ந்த மாற்று சமூகத்தைச் சார்ந்த ஆகாஷ் ராமதுரை வயது 22 சந்தானகுமார் வயது 21, ஆகியோர் என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் தற்பொழுது 2 வாலிபர்களின் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேய துடித்த அவலம்... வீரவநல்லூர் காவல் ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாப நிலை...!