நேபாளத்தை விழுங்கிய வெள்ளம் எப்படி உருவானது? சீனாவின் ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!
இந்த பேரழிவை தொடர்ந்து, வெள்ளம் எவ்வாறு உருவானது என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் மேற்கொண்ட ட்ரோன் பதிவு புதிய கவனத்தை பெற்றுள்ளது.
காத்மாண்டு: நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னணியில் பனிப்பாறைகள் உருகி சரிந்திருக்கலாம் என்ற நிலையில், அந்த நிகழ்வு சீனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் ட்ரோன் கேமராவில் தற்செயலாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அந்நாட்டில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அளவில் சேறும் சகதியும் அடித்துச் சென்றதால், குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் மக்கள் மாயமாகியுள்ள நிலையில், மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 900-ஐ கடந்துள்ளதாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேரழிவை தொடர்ந்து, வெள்ளம் எவ்வாறு உருவானது என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் மேற்கொண்ட ட்ரோன் பதிவு புதிய கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்! பலி எண்ணிக்கை 903 ஆக உயர்வு! பேரழிவு குறித்து பிரதமர் வேதனை!
கடல் மட்டத்திலிருந்து 7,200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் சிகரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் மிகப்பெரிய பாறைகள் மற்றும் பனிப்பாறை பகுதிகள் உடைந்து சரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பனிப்பாறை அல்லது பனிப்பாறை சார்ந்த பகுதிகள் திடீரென சரிவது, கீழ்நோக்கி செல்லும் நீரின் அளவை அதிகரித்து வெள்ளப்பெருக்கை தீவிரப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், வைரலாகும் இந்த ட்ரோன் காட்சியே நேபாள பேரழிவுக்கான நேரடி காரணம் என்று தற்போது உறுதியாக கூற முடியாது. இதனை உறுதிப்படுத்த விரிவான அறிவியல் ஆய்வுகள் தேவை.
இதேபோன்று இமயமலை மற்றும் உலகின் பிற மலைப் பகுதிகளிலும் பனிப்பாறை சரிவு மற்றும் பனிக்கட்டி உருகுதல் தொடர்பான சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளன. 2021-ல் உத்தரகண்ட், 2023-ல் சிக்கிம் மற்றும் 2025-ல் ஸ்விஸ் ஆல்ப்ஸ் பகுதிகளில் பனிப்பாறை தொடர்பான பேரிடர்கள் ஏற்பட்டன.
இதனால், காலநிலை மாற்றம் மற்றும் உயரமான மலைப் பகுதிகளில் பனிப்பாறைகளின் நிலைத்தன்மை குறித்த அச்சமும் மீண்டும் அதிகரித்துள்ளது. நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், வைரலாகும் ட்ரோன் காட்சிகள் பேரழிவின் பின்னணியை புரிந்துகொள்ள புதிய தடயமாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணி! மீண்டும் வெள்ள அபாயம்! 3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்; இந்தியர்களின் நிலை?