×
 

இஸ்ரேலை தொடர்ந்து சீண்டும் ஹமாஸ்! நிச்சயம் பதிலடி கொடுப்போம் - பிரதமர் நெதன்யாகு வார்னிங்!

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பாலஸ்தீனர் கொல்லப்பட்டார். இது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடும் போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசா பகுதி நிலைகுலைந்து போயுள்ளது. 

அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர். உலக நாடுகள் பலவும் இந்த போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்?!! உக்ரைனுக்கு அதிபர் புடின் வார்னிங்!

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாரித்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன. இதனால் சமீபத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதியான ரயிட் சயித் கொல்லப்பட்டார். இது போரை மேலும் தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், ராபா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இஸ்ரேல் வீரர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஹமாஸுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்தார். 

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "அக்டோபர் மாதம் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். காசாவில் ஹமாஸ் போராட்டக் குழுவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். பயங்கரவாதம் இல்லாத ஒரு பிராந்தியத்தை உருவாக்குவதே ஒப்பந்தத்தின் நோக்கம். ஒப்பந்தத்தை மீறும் ஹமாஸுக்கு பதிலடி கொடுப்போம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இது போரின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த போர் நாட்டின் பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றை பெரிதும் பாதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்து வருகின்றன.

இதையும் படிங்க: டைம் வேஸ்ட் பண்ண விரும்பல!! ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்?! அதிபர் ட்ரம்ப் அப்செட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share