வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம், எச்சரிக்கை! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி அறிவுறுத்தல்!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மம்தா பானர்ஜி அறிவுறுத்தல்.
மேற்கு வங்கத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது எள்ளளவும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது ஒவ்வொரு விபரத்தையும் சரியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும், மிகச் சிறிய தவறுகள் கூட வேட்புமனு நிராகரிக்கப்படக் காரணமாக அமையலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், ஆளும் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரிக்க வாய்ப்புள்ளதாக மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!
இது போன்ற நடவடிக்கைகள் திட்டமிட்டு எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகச் செய்யப்படலாம் என்பதால், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!