ஜனநாயக துரோகம் செய்த ஜனநாயகன்... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்...!
நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஜனநாயக துரோகமாக பார்க்கிறோம் என சீமான் கருத்து
கரூர் 80 அடி சாலை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு கரூர் மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் வழக்கம் போலன்றி LED திரை வாயிலாக நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரும், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பதை சீமான் விளக்கினார்.
குறிப்பாக செய்தியாளர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்படாததால் பெரும் சிரமம் அடைந்தனர் அதேபோன்று சீமான் உரையாற்றிக் கொண்டிருந்த மேடை முன்பாக சிறுவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ”அவரு ஜெயிச்சி ஆட்சிக்கு வரப்போறது கிடையாது”... சீமானை எகிறி அடித்த செங்கோட்டையன்... நாதக டோட்டல் டெமேஜ்...!
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்ற கேள்விக்கு, ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை எங்களது கொள்கை ரீதியாக நாங்கள் ஏற்கவில்லை. ஒரு பதவியில் இருக்கும்போதே மற்றொரு பதவிக்கு போட்டியிடுவதும் தவறு. நான் இரண்டு தொகுதிகளில் நின்றால், இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை நானே எடுத்துக்கொள்வது போன்றதாகும். தன் மீதோ அல்லது மக்கள் மீதோ நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இரண்டு தொகுதிகளில் நிற்பார்கள். இது முழுக்க முழுக்க ஜனநாயகத்திற்கு எதிராக பார்க்கிறோம் .நடிகர் விஜயகாந்த் இதுகுறித்து பேசி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, என் தம்பி அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என நினைக்கிறேன். பாஜகவில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலேயே அக்கட்சிக்கு மூச்சுத் திணறுகிறது. கட்சிக்காக உழைத்த முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்காமல், யார் யாருக்கோ சீட் கொடுத்துள்ளனர். இதுதான் பாஜகவின் தற்போதைய நிலை என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: “உன்ன எவன்டா வர சொன்னா...” - விஜயை ஒருமையில் சாடிய சீமான்... ஷாக்கில் தவெக தொண்டர்கள்...!