×
 

செவிலியர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்... அரசு செவி சாய்க்கணும்... செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்...!

செவிலியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு செல்வப் பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நள்ளிரவு நேரத்தில் கொட்டும் பனியையும் பொறுத்தப்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேப்பாக்கம் சிவானந்த சாலை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை மாலை 4 மணிக்கு பிறகு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாநகர பேருந்து மூலமாக ஏற்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தின் நடைமேடை 9-ல் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட 700 செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி… தமிழ்நாட்டுக்கு முன்னோட்டம்… செல்வப் பெருந்தகை பெருமிதம்…!

எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்... பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... செல்வப் பெருந்தகை கண்டனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share