ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடி.. எலான் மஸ்கை தொடர்ந்து ஒபாமா செய்த தரமான செய்கை..!
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று அமெரிக்க மாஜி அதிபர் பராக் ஓபாமா வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த அழகிய பெரிய மசோதா எனப்படும் செலவின மற்றும் வரிக்குறைப்பு மசோதா செனட் சபையில் ஜூலை 1ம் தேதி நிறைவேறியது. இந்த மசோதாவில் மக்களுக்கான வருமான வரி, சிறு தொழில் வரி ஆகியவற்றை குறைத்துள்ளனர்.
இதனால், அரசுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் செலவு அதிகரிக்கும். ராணுவத்துக்கு மற்றும் புலம்பெயர்ந்தோர் கண்காணிப்புக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். அதே சமயம் அரசு மருத்துவக் காப்பீடுக்கான செலவில் கை வைத்துள்ளனர். அரசின் கடன் உச்ச வரம்பை 40 லட்சம் கோடி அளவு உயர்த்துவது ஆகிய அம்சம் இதில் உள்ளது.
செனட்டில் இந்த மசோதாவின் 1,000 பக்க வரைவு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விவாதம் நடத்தி திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு 50 பேர் ஆம் என்றும்; 50 பேர் இல்லை என்றும் ஓட்டளித்தனர். இதை அடுத்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தன் 'டை பிரேக்கிங்' எனப்படும் சமநிலையில் இருக்கும்போது, முடிவை தீர்மானிக்கும் ஓட்டை பயன்படுத்தி மசோதாவை வெற்றிபெறச் செய்தார். இது, அதிபர் டிரம்பின் கையெழுத்தை விரைவில் பெற்று சட்டமாகும்.
இதையும் படிங்க: அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்! புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்? உலக நாடுகள் அச்சம்..!
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே தருணத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், மருத்துவ உதவி நிதியை குறைக்கும் மசோதாவை மெடிக் எய்ட் (medic aid) என்ற பெயரில் டிரம்ப் கொண்டு வந்துள்ளார். இந்த மசோதாவுக்கு அமெரிக்க மாஜி அதிபர் பராக் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு;
மசோதாவை அவை நிறைவேற்றினால் அது செலவுகளை அதிகரிக்கும். அடுத்த தலைமுறையினருக்கும், தொழிலாளர் வர்க்க குடும்பங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இன்றே உங்கள் பிரதிநிதியை இந்த மசோதாவை எதிர்த்து ஓட்டளிக்கச் சொல்லுங்கள் என ஒபாமா பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்த வரியை எதிர்த்து தொழிலதிபர் எலான் மஸ்க் டோக் துறையின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.
செனட் சபையில் மசோதா நிறைவேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். வரலாற்றில் மிக பெரிய கடன் அதிகரிப்புக்கு இந்த மசோதா வழி வகுக்கும்.பைத்தியக்காரத்தனமான இந்த மசோதா நிறைவேறினால் புதிய கட்சியை தொடங்குவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனால், கோபடைந்த டிரம்ப், எலானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிபர் பதவிக்கு என்னை வலுவாக ஆதரிப்பதற்கு நீண்ட காலம் முன்பிருந்தே, நான் மின்சார வாகன அவசியத்தை எதிர்க்கிறேன் என்பது எலான் மஸ்குக்கு தெரியும். மின்சார கார்கள் பரவாயில்லை. ஆனால், அனைவரும் ஒன்றாவது வைத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது.
வரலாற்றிலேயே இதுவரை யாரும் அனுபவிக்காத அதிகளவிலான வரிச்சலுகையை எலான் அனுபவித்துள்ளார். இந்த மாதிரியான வரிச்சலுகைகள் இல்லாவிட்டால், எலான் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். அப்படியானால் இனி ராக்கெட் ஏவுதல், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார் உற்பத்தியும் இருக்காது. இதன் மூலம், எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பணம் சேமிக்கப்படும். அரசு செயல் திறன் துறைக்கும் நல்லதுதான் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., போர் குறித்து ட்ரம்ப் சொன்னது உண்மையா? மோடியிடம் அமெரிக்கா பேசியது என்ன..?