×
 

மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

ஆண்டிப்பட்டி அருகே அம்மச்சியாபுரம் பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு தங்க தோடு மற்றும் தங்க வளையல்கள் திருடப்பட்ட சம்பவம் . மூன்றே கால் பவுன் தங்க நகைக்காக தங்களது பாட்டியை இரண்டு பேரன்களும், ஒரு பேத்தியும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது காவல்துறையினரின்  விசாரணை மூலம் அம்பலம்.  ஒரு பேரனையும் பேத்தியையும் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்,16 வயதே ஆன மற்றொரு பேரனான சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த கணவனை இழந்த மூதாட்டியான ரோசலின் மேரி. .74 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள நிலையில் வெவ்வேறு பகுதிகளில் அவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்

.பாட்டியுடன் 20 வயதான குணப்பாக்கியவதி என்ற மகன்வழி பேத்தி மட்டும் உடன் இருந்து வருகிறார்.இதில் மகள் வழி பேரனான வீரபாண்டியை சேர்ந்த அலெக்ஸ் என்ற 23 வயதான இளைஞர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்து சென்றதாகவும் இதனால் உறவினர்கள் அருகே உள்ள வீட்டார்களிடம் அந்த இளைஞர் மீது மூதாட்டி திருட்டு பட்டம் கட்டி பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செலவிற்கு பணம் வேண்டும் என்று முடிவு எடுத்து மகள்வழி பேரனான அலெக்ஸ் மற்றும் மகன் வலி பேரனான 16 வயது சிறுவன் நவநீதகிருஷ்ணனும் இணைந்து மூதாட்டி உடன் இருக்கும் பேத்தி குணபாக்கியவதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு பணமோ நகையோ வேண்டும் இதற்கு நீ உதவ வேண்டுமென்று கேட்டு இரவில் வீட்டிற்கு வந்த நிலையில் குணப்பாக்கியவதியை வெளியில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை மூச்சை பிடித்து தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதையடுத்து நேற்று பகலில் சம்பவம் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற க.விலக்கு காவல்துறையினர் இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக 
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியை இரண்டு பேரன்களும் பேத்தியும் சேர்ந்து திட்டம் போட்டு மூன்றே கால் பவுன் தங்க நகைக்காக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது

இதையடுத்து மகள்வழி பேரனான அலெக்ஸ் மற்றும் மகள்வழி பேத்தியான குணபாக்கியவதி ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் இந்த கொலைக்கு தொடர்புடைய 16 வயதே ஆன சிறுவனான நவநீதகிருஷ்ணனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டி கை மற்றும் காதுகளில் அணிந்திருந்த மூன்றேகால் பவுன் தங்க நகைக்காக பேரன்களும் பேத்தியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்!! திரைமறைவில் கரூர் கம்பெனி! சிக்கும் செந்தில்பாலாஜி?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share