×
 

ஈரான் செய்த அதிர்ச்சி செயல்... இந்திய மாலுமிக்கு நேர்ந்த பயங்கரம்... பற்றி எரியும் ஹோர்முஸ் நீரிணை...!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: #BREAKING கும்மிடிப்பூண்டியில் மீண்டும் அதிபயங்கரம்... உடல் சிதறி மரணம்... பலரின் நிலை என்ன?

இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுவதால், இந்தப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு தாக்குதலும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலின் காரணமாக கப்பல்களில் தீப்பிடித்தது. இருப்பினும், கப்பலில் இருந்த மாலுமிகள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் மொத்தம் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளும், சர்வதேச அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலக எண்ணெய் சந்தை மீதும் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
 

இதையும் படிங்க: காலையிலேயே குட் நியூஸ் சொன்ன சி.எம். விஜய்... தாய்மாமன் தங்க மோதி திட்டம் குறித்து அதி முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share