அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து...23 பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்...!
ஆம்னி பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தகவல்
திண்டுக்கல் அருகே பெங்களூருக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - 23 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூருக்கு தனியார் பேருந்து நேற்று இரவு கிளம்பியது. ஆம்னி பேருந்தை போடியைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 44 )என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஆம்னி பேருந்து இன்று அதிகாலை 2::30 மணி அளவில் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... 650 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து... 37 பேர் பலி...!
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உட்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயம் அடைந்த 23 நபர்களில் 10 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை சிறு காயங்கள் என்பதால் உடனடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதில், பலத்த காயம் அடைந்த திண்டுக்கல் சுவாதி (30), கம்பம் தங்கம் (35), கம்பம் முத்துச்செல்வம் (28), உத்தமபாளையம் சசி பிரபா (36), கம்பம் ரேகா (27) மற்றும் தேனி குமுதா (45) ஆகிய 5 பெண்கள், 1 ஆண் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனியார் பேருந்து ஓட்டுனர் அப்பாஸ் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விழுப்புரத்தில் பேரதிர்ச்சி... தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து... 30 பேரின் நிலை என்ன?