×
 

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டும்தான்.. எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு..!

ஆண்டுக்கு இனி 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலையை தினமும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்திற்கு ஒருமுறை என்றும் வலைகளை மாற்றி அமைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் எண்னெய் நிறுவனங்கள் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க: இனி யார்கிட்டயும் கெஞ்ச வேண்டாம்.. ரயிலில் கீழ்வரிசை படுக்கை இவங்களுக்கு மட்டும்தான்.. மத்திய அரசு உறுதி..!

அதாவது  14.20கிலோ கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டுக்கு 15 மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இதற்கு மேல் தேவைப்படும் பட்சத்தில், அந்த நபர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கடிதம் மூலம் சிலிண்டர்களை முறையான தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதன்மூலம் முறைகேடுகளாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை தடுப்பதற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதே விலையிலேயே நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் ஆண்டுக்கு 15 மட்டுமே வாங்க முடியும் என எண்னெய் நிறுவனங்கள் அறிவித்தது பொது மக்களிடையே பேசு பொருளாகி உள்ளது.

இதையும் படிங்க: அதிகப்பிரசிங்கித் தனம்... வேல்முருகன் மீது ஆத்திரத்தில் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share