×
 

ஓபிஎஸ் எடுத்தது தவறான முடிவு! மக்கள் ஏற்க மாட்டார்கள்!! ஓபிஎஸ் ஆதரவாலர்கள் தவெகவில் இணைகிறோம்! புது ட்விஸ்டு!

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தொடரும் அதிரடி நிகழ்வுகள்! இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்தார். அவருடன் மகன் ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனும் கட்சியில் சேர்ந்தனர். முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஆனால் இந்த முடிவுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது! நீலகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் கடும் விமர்சனம் செய்துள்ளார். 

"ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பலமுறை கோரிக்கை விடுத்தும் எடப்பாடி பழனிசாமி சேர்க்கவில்லை. 2026 தேர்தலில் அதிமுக தோல்விக்கு எடப்பாடியே காரணம். 

இதையும் படிங்க: 3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!

சூழ்நிலை காரணமாக ஓபிஎஸ் திமுகவில் இணைந்தாலும் இது தவறான முடிவு. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் திமுகவுக்கு சென்றதை அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என பாரதியார் கூறியுள்ளார்.

மேலும், "ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) இணைய உள்ளோம். பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. இன்றோ அல்லது ஓரிரு நாட்களில் இணைப்பு நடக்கும். தவெக தலைவர் விஜய்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

அவர் செல்லும் இடங்களில் பெருந்திரளான மக்கள் ஆரவாரம் செய்கின்றனர். வரும் தேர்தலில் விஜயை முதலமைச்சராக அமர்த்துவதற்காக தீவிர களப்பணி செய்வோம்" என பாரதியார் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் திமுகவுடன் இணைவதால் அவரது விசுவாசிகள் பலர் தவெகவை நோக்கி திரும்புவது தெளிவாகத் தெரிகிறது. இது 2026 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்ட ஓபிஎஸ், இப்போது திமுகவில் இணைந்தது அவரது ஆதரவாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தவெகவில் இணைவது தங்கள் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்கும் வழி என அவர்கள் கருதுகின்றனர். தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கிறது – ஓபிஎஸ் இணைப்பு புதிய பிரிவுகளை உருவாக்கியுள்ளது!

இதையும் படிங்க: திமுக துணை பொதுச்செயலாளார் ஓபிஎஸ்?! அதற்குள் பதவியா? தேனி, போடியில் மீண்டும் போட்டி?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share