×
 

இதுக்கு ஒரு என்டே இல்லையா? - பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை...அதிரும் தேனி...!

போதை மாத்திரைகளை விற்பனை செய்ததற்காக பெரியகுளத்தைச் சேர்ந்த தங்கபாண்டி(24), பழனிவேல்(26), லோகேஷ்வரன் (28) ஆகியோர் கைது

ஆன்லைன் வலி நிவாரணி மாத்திரைகளை பெற்று பள்ளி மாணவர்களின் போதைக்கு மாத்திரைகளை  விற்பனை செய்த மூன்று இளைஞர்களை தேனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தேனி நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகன ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் சந்தேகப்படும் விதமாக  நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அவற்றை கரைந்து ஊசி மூலம் நரம்பில் செலுத்து போதை அனுபவித்து வந்ததாகவும். மேலும் இந்த வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பள்ளி மாணவர்களுக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: போதைக்கு எதிராக மெகா ஆக்‌ஷன்..! ரூ.264 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..!!


அதனைத் தொடர்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததற்காக பெரியகுளத்தைச் சேர்ந்த தங்கபாண்டி(24), பழனிவேல்(26), லோகேஷ்வரன் (28) ஆகியோரை கைது செய்த தேனி நகர் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து500 மாத்திரைகள், ஊசி, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பின்னர் மூவரையும்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

இதையும் படிங்க: சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share