×
 

பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!

பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி கடுமையாக கண்டித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவைசி பாகிஸ்தான் பற்றி பேசியுள்ளார்.



"பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு. அந்த நாடு இந்தியாவை அமைதியாக வாழவே விடாது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து உதவி செய்யும் பாகிஸ்தானை, சர்வதேச பொருளாதார அமைப்பில் கிரே பட்டியலில் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானைவிட இந்தியா எப்போதும் வலிமையாகவே இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த ஒரு நாடு. பாகிஸ்தானில் பல்வேறு இனத்தவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குள் அமைதியை ஏற்படுத்த அந்த நாட்டு அரசால் முடியவில்லை.


அதுமடுமல்ல, அண்டை நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தானால் நட்புறவுடன் இருக்க முடியவில்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் கப்பல், விமானம் போன்றவற்றின் சேவைகளுக்கு தடை விதித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனினும், சர்வதேச அளவில் அந்த நாட்டை ‘கிரே’ பட்டியலில் வைப்பது உட்பட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 1947ஆம் ஆண்டில் இந்தியாவை பிரிக்க வேண்டும் என்று ஜின்னா கூறியபோது, அவரது பேச்சை புறக்கணித்தவர்கள் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள். அவர்களும் அவர்களது வாரிசுகளும் இந்த மண்ணை விட்டு எங்கும் செல்ல மாட்டார்கள்." என்று ஒவைசி கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கினால் அணு ஆயுதங்களை எடுப்போம்.. பீதியில் பாகிஸ்தான் தூதர் பிதற்றல்.!!

இதையும் படிங்க: எல்லையில் தெறித்து ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. இந்திய ராணுவம் குவிப்பால் பீதியில் தீவிரவாதிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share