×
 

இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் 'ஆண்குறி'..! விசிகவினரின் வக்கிரபுத்தி..! கொதித்தெழும் தேச பற்றாளர்கள்..!

 இந்தியாவிற்குள் இருந்து கொண்டு, இந்தியாவின் சோற்றை சாப்பிட்டு ஏகபோகம் அனுபவித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.

''பாகிஸ்தான் மீது போர் தேவை இல்லாதது. நம் நாட்டின் வலிமையை வேறு நாட்டின்மீது நிரூபித்துக் காட்டக்கூடாது. இந்தப் போர் தேவையற்றது திருமாவளவன்'' எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் விசிக தலைவரும், எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன். 

காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல்எழுந்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். 


 
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய பாகிஸ்தான் மீது போர் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவளிக்கும் வகையில் பேசி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும், பாகிஸ்தான் மீது போர் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவளிக்கும் வகையில் பேசி வருகிறார் என இந்து மக்கள் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்து வந்தன. 

இதையும் படிங்க: தலைமறைவு மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி... பயங்கரவாத்தை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான் அரசு..!

இந்துக்களை சாதி, மொழி ரீதியாக பிரிக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திட்டங்களை எதிர்க்க வேண்டும் என திருமாவளவனுக்கு தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் உத்தரவிடுகின்றன. திருமாவளவனின் சமீபகால பேச்சுகளும், செயல்பாடுகளும், அவர் பங்கேற்ற போராட்டங்களையும் பார்த்தால் முழுக்க முழுக்க தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.

திருமாவளவனை போலவே பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து கூறிய அசாம் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திருமாவளவன் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என இந்துமக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் புகார் தெரிவித்தன. 

இந்நிலையில், விசிக கட்சியை சேர்ந்த மூர்த்தி என்கிற பிரமுகர் தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள போஸ்டர் மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதில், விசிகே கட்சியின் உறுப்பினரான மூர்த்தி படம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக பாகிஸ்தானின் பிரதேசம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சிதைந்த வரைபடத்தைக் காட்டுகிறது. அந்த வரைபடத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நீளும் ஒரு ஆண்குறி நீண்டிருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறுவருப்பான ஒரு தலைப்பும் இடப்பட்டுள்ளது. 

இந்தப்பதிவு ஆத்திரமூட்டும், தேச விரோத உணர்வால்  வெளிப்பட்ட அநாகரீக செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

 இந்தியாவிற்குள் இருந்து கொண்டு, இந்தியாவின் சோற்றை சாப்பிட்டு ஏகபோகம் அனுபவித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. இவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மனித குலத்துடன் வாழ தகுதி இல்லாத மிருகங்கள் இந்த வி.சி.கே கட்சிக்காரங்க🤮🤮🤮#OperationSindoor pic.twitter.com/xBYOFkduKc

— Murali (@MuraliS27) May 12, 2025

 

இந்தப் பதிவு ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையை கிண்டலிக்கும் தொனியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தலித்துகளை மையமாகக் கொண்ட கட்சியான விசிகே, இப்போது இந்த வரைபடத்திற்காகவும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share