×
 

"I belongs to Dravidian stock"... புதிதாக பொறுப்பேற்கும் எம்.பிக்களுக்கு முதல்வர் உற்சாக வாழ்த்து..!

மாநிலங்களவையில் இன்று பொறுப்பேற்க உள்ள திமுக எம்பி களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்தது. பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைந்தது. ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபோது, திமுக சார்பில் வில்சன், சல்மா,சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டனர்.

மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களும், கமல்ஹாசனை மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வாகினர். மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு பேரும் இன்று பதவி ஏற்கின்றனர். 

திமுக கூட்டணியில் இருந்து எம்பிக்களாக தேர்வாகி பதவியேற்கவுள்ள அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "I belong to the Dravidian stock" பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை தமிழ்நாட்டின் உரிமைக்குரலை நமது எம்பிக்கள் ஓங்கி ஒலிப்பதாக தெரிவித்தார். மேலும், மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்ற எம்பி.களையும் முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

இதையும் படிங்க: எல்லாம் சரியா நடக்குதா? எதுவும் மிஸ் ஆக கூடாது! உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!

திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற வைகோ உரையில் உள்ளம் உருகி நெகிழ்ந்ததாக கூறினார். சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை கூறிய முதல்வர் ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்க உள்ள எம்பிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: மக்கள் கிட்ட கனிவா.. கவனமா நடந்துக்கோங்க! காவலர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு முதல்வர் அதிமுக்கிய அறிவுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share